ஸ்மார்ட்சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க விரைவில் குழு!: கொசு ஒழிப்பு பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு பேட்டி..!!

சென்னை: ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரணை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலை பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் டிரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரணை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

புதிதாக மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். முன்னதாக சென்னை பசுமைவழிச்சாலை பகுதியில் உள்ள  நீர்வழி தடங்களில் டிரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் 3,463 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

கைத்தெளிப்பான்கள் மற்றும் 371 பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய கருவிகள் மூலமாகவும், கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் நிதிச்சுமை காரணமாக காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் முதலமைச்சரின் அனுமதி பெற்று காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: