நாட்டில் முதல் முறை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒன்றிய செயலர் நியமனம்

புதுடெல்லி:  நாட்டில் முதல் முறையாக ஒன்றிய சட்டத்துறை செயலாளர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய சட்டத்துறை செயலாளராக இருந்த அனூப் குமார் மெந்திராட்டா, ெடல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜியம், அனூப் குமார் பெயரை பரிந்துரை செய்திருந்தது. அனுப் சட்ட செயலாளராக நியமிக்கப்பட்டபோது, அவர் டெல்லியில் நீதித்துறை அதிகாரியாக  இருந்தார். இந்நிலையில், நீதித்துறை அதிகாரியான இவர் பதவி மூப்பு அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய சட்ட செயலாளராக நியமிக்கப்பட்டபோது அனூப் நீதித்துறை அதிகாரியாக இருந்தார். முதல் முறையாக மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் பணியாற்றுபவர் ஒன்றிய சட்ட செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் 2023ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி வரை ஒப்பந்த அடிப்படையில் சட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அனூப் குமார் தவிர நீனா பன்சால் கிருஷ்ணா, தினேஷ் குமார் சர்மா மற்றும் சுதிர் குமார் ஜெயின் ஆகியோருக்கும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: