நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக போக்குவரத்து சிக்னலில் ரவுண்டானா: அளவீடு பணிகள் தொடக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள கே.பி. ரோட்டில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் வந்துள்ளன. ஏற்கனவே இந்த பகுதி கடுமையான போக்குவரத்து நெருக்கடியான சாலை ஆகும். குறிப்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டங்கள் நடந்தால், கே.பி. ரோட்டில் வாகனங்கள் திருப்பி விடப்படும் நிலை உள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், டெரிக் சந்திப்பு பகுதியில் இருந்து வேட்டாளி அம்மன் கோயில் வரை  ₹1.5 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்தன. இதற்காக கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்த போக்குவரத்து சிக்னல் அகற்றப்பட்டது. இந்த சாலையில்  இருந்த பழமையான மரங்களையும் வெட்டி அகற்றினர். பின்னர் சாலை விரிவாக்க பணிகள் நடந்தன.

தற்போது சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்த பின்னரும், போக்குவரத்து நெருக்கடி குறைந்த பாடில்லை. இதற்கு முக்கிய காரணம், கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் முறையான வாகன போக்குவரத்துக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அப்படியே போட்டுள்ளனர். இப்பகுதியில் சாலை விரிவாக்கம் முடிவடைந்ததும் 4 சாலைகள் இணையும் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த ரவுண்டானா அமைக்கப்பட்டால், கலெக்டர் அலுவலக சந்திப்பு பிரீ லெப்டாக (வாகனங்கள் நிற்காமல் செல்லும் வகையில்) மாறும் என்றும்,  இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்  என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். தற்போது சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.

ஆனால் ரவுண்டானா அமைக்கப்பட வில்லை. எனவே இந்த பகுதியில் போக்குவரத்தை முறைப்படுத்த ரவுண்டானா உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன கலெக்டர்கள் அப்பகுதியில் செடி கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டு அளவீடு பணிகள் தொடங்கியுள்ளது கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 15 அடி தூரம் இடிக்கப்பட்டு புதிய ரவுண்டானா கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: