பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிகிறது. நேற்று நடந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 43-36 என புனேரி பால்டனை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி 40-32 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை சாய்த்தது. 12வது வெற்றியை பதிவு செய்த டெல்லி, பட்டியலில் 2வது இடம்பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தமிழ்தலைவாஸ் தனது கடைசி லீக் போட்டியில் 33-43 என குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிடம் சரண் அடைந்தது.