சிங்கப்பூர் பிரதமர் பேச்சுக்கு கண்டனம்

புதுடெல்லி: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசிய அந்த நாட்டின் பிரதமர் லீ ஹிசியன் லுாங், மறைந்த பிரதமர் நேருவை புகழ்ந்து பேசினார். ‘நேரு உருவாக்கிய இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் பாதிக்கும் மேற்பட்ட எம்பி.க்கள் மீது பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. உயர்ந்த தலைவர்கள் இருந்த நாடுகளில் காலப்போக்கில் அந்த தலைவர்களின் வழிநடப்பவர்கள் குறைந்து போய் விடுகிறார்கள். நாடுகளும் மாறி போய் விடுகின்றன,’ என்று அவர் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் உள்ள சிங்கப்பூர் நாட்டு துாதர் சைமன் வோங்கை ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று நேரில் அழைத்து லீயின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. 

Related Stories: