4,000 லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் கரியமலை கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் தனது உறவினர் அருண் பெயரை சிட்டாவில் சேர்க்க வேண்டி குந்தா தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) லதா, ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

அதன்படி நேற்று அவர் தாலுகா அலுவலகத்தில் விஏஓ லதா கூறியபடி வெளியில் ஜீப்பில் இருந்த கண்ணன் என்பவரிடம் ரூ.4,000த்தை கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து விஏஓ லதா, கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: