பாஜ வெளிநடப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் பேட்டி

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புக்கு பின்னர் சட்டப்பேரவை பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: சட்டமன்றத்தில் இன்றைக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசால் 2வது முறையாக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. நீட்டால் சமூகநீதிக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக எல்லா மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மை நிலமை அது இல்லை. இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் நீட் தேர்வால்  எஸ்சி, எஸ்டி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், பிற்படுத்தப்பட்டோர் என்று எல்லா சமூகத்திற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் அரசியல் ஆக்குவதற்காக, இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இது உண்மையில் ஏற்புடையதாக இல்லை. ஆகையால் பாஜ சார்பாக தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம். அரசு மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். எல்லா மாணவர்களும் பயன்பெற வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: