மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

டெல்லி: மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2 நாள் பயணமாக டெல்லி வந்துள்ள கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதேபோல கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களுடன் நதிநீர் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நேரடியாக சந்தித்து கர்நாடகா மாநிலத்தின் நிதி, மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள கர்நாடகா பவனில் தற்போது மாநில நீர்வளத்துறை அமைச்சர்,

சட்டத்துறை அமைச்சர், வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையில் கர்நாடக அரசு சார்பில் மேகதாது, கிருஷ்ணா, மகதாயி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இடையே இருக்க கூடிய நதிநீர் பிரச்சனைகள் குறித்து இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: