புனேயில் கட்டுமான பணியின்போது விபத்து; ஸ்லாப் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலி: பிரதமர் இரங்கல்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள எரவாடா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. இரவு நேரத்திலும் இங்கு பணிகள் நடந்து வருகிறது. நேற்றிரவு வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஸ்லாப் இடிந்து விழுந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் இறந்த கிடந்தது தெரிந்தது. 5 பேர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்திருந்தவர்களை சிகிச்சைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என்று காவல்துறை துணை ஆணையர் ரோஹிதாஸ் பவார் தெரிவித்தார். இந்நிலையில், புனே கட்டுமான பணி விபத்தில் உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் என பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories: