அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பம் சிதம்பரம் நகராட்சி தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி

சிதம்பரம்: சிதம்பரம் நகர திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை சிதம்பரத்தில் நடந்தது. நகர திமுக செயலாளர் கே.ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் திமுக. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். யாரும் எதிர்பாராத வகையில் தேமுதிக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து திமுக நகர செயலாளர் செந்தில்குமார் சிதம்பரம் நகரில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வார்டு விபரங்கள் மற்றும் வேட்பாளர் விவரங்களை வெளியிட்டார். மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 25 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 3 வார்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ம், மற்ெறாரு கூட்டணி கட்சிக்கு தலா ஒரு வார்டும் ஒதுக்கப்பட்டது. திடீர் திருப்பமாக தேமுதிகவுக்கு  ஒரு வார்டு தர உடன்பாடு ஆனது. இதுகுறித்து கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக அவைத் தலைவர் பாலு கூறுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். எனவே திமுக கூட்டணியை தேமுதிக ஆதரிக்கிறது. எங்களுக்கு ஒதுக்கிய வார்டில் நகர செயலாளர் பாலகிருஷ்ணன் மனைவி குணசுந்தரி போட்டியிடுகிறார் என்றார்.

Related Stories: