பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி.20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் போட்டி முறையே பிப்.6,9,11ம்தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் அகமதாபாத் சென்றடைந்த இந்திய அணியினர் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.