மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல். இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டபோது தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்எல்ஏ சிகிச்சை பெற்று வருகின்றார்.
