சென்னையில் 100 வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள்: முதற்கட்ட பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த்

சென்னை: சென்னை மாநகராட்சியில் தேமுதிக சார்பில் 100 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளரின் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் தேமுதிக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளில், வார்டு 6ல் இன்பராஜ், மாமுரளி(வார்டு 7), டி.லோகேஸ்வரன்(வார்டு 10), புஷ்பலதா வெங்கடேசன்(வார்டு 11), எம்.ஆர்.அருளானந்தம்(வார்டு 12), மேகலா கண்ணன்(வார்டு 14), வி.செல்வகுமார்(வார்டு 23), மாலினி லட்சுமணன்(வார்டு 34), ப.சங்கர்(வார்டு 35), மு.விஜயகண்ணன்(வார்டு 36), ஆர்.நாராயணன்(வார்டு37), நா.தனசேகர்(வார்டு 38),  எம்.புதுயுக பிரியா(வார்டு41), ஆர்.கணேஷ்(வார்டு 44), டி.சவுந்தர்ராஜன்(வார்டு 45), வி.ஜானகி(வார்டு 46), எல்.ரஞ்சனி(வார்டு 47), பி.சகாயராஜ்(வார்டு 56), அருள்(வார்டு 57), பி.சர்தார் (வார்டு 60), எஸ்.அலெக்சாண்டர்(வார்டு 64), அபிராமி நல்லதம்பி(வார்டு 66), டி.தேவி டில்லிபாபு(வார்டு 67), என்.நாகவள்ளி(வார்டு 69), எம்.புவனேஸ்வரி(வார்டு 71) போட்டியிடுவார்கள். இவர்களுக்கு சென்னை மாநகர மாவட்டம், பகுதி, வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு கொடுத்து இவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: