பஞ்சாப் தேர்தல் ... அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் களம் இறங்குகிறார் சித்து: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் துரி தொகுதியில் மனு தாக்கல்!!

சண்டிகர் : பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 31ம் தேதி வரை அங்கு பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் வேட்பாளர்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றி வீடு வீடாகச் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேட்பு மனு தாக்கலும் விறுவிறுப்படைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் நட்சத்திர வேட்பாளருமான சித்து, அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் களம் இறங்குகிறார்.

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று அவரது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதே போல் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்,  துரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். ஆதரவாளர்களுடன் சென்று அவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதே போல் மற்ற கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  பிப்ரவரி முதல் பேரணி மற்றும் பொது கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பிப்ரவரி 8ம் தேதி பஞ்சாபில் தேர்தல் பரப்புரையை செய்ய திட்டமிட்டுள்ளார். 

Related Stories: