பாலமேடு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட படிக்கட்டிற்கு பக்கவாட்டு சுவர் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

அலங்காநல்லூர்: பாலமேடு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட படிக்கட்டிற்கு பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலமேட்டில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக் கிடங்கு கடந்த 2020-21.ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் நபார்டு வங்கி நிதியின் மூலம் 37 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் ஏறி செல்ல முடியாத அளவுக்கு படிக்கட்டு மிக உயரமாக கட்டப்பட்டுள்ளது.

மேலும் பக்கவாட்டு சுவரும் அமைக்கப்படவில்லை. எனவே, இந்த புதிய கட்டிடம் திறப்பு விழா காணும் முன்பு படிக்கட்டு அமைப்பை மாற்றி அமைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் ஏறிச்செல்லும் வகைகள் தாழ்தள மேடையும், பக்கவாட்டு சுவருடன் கூடிய படிக்கட்டு அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: