ஏர்டெல்லில் கூகுள் ரூ7,500 கோடி முதலீடு

புதுடெல்லி: ஏர்டெல்லில் கூகுள் நிறுவனம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. கூகுள் நிறுவனம் பாரதி ஏர்டெல்லில் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதில், ரூ.5,260 கோடிக்கு பங்குகளாக வாங்குகிறது. ரூ.2,250 கோடியை முதலீடாக செய்கிறது. இதன்படி, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 1.28 சதவீத பங்குகளை கூகுள் வாங்குகிறது. அதாவது, 71,176,839 பங்குகள் வாங்கப்படுகிறது.

ஒரு பங்கு விலை ரூ.734 என்ற மதிப்பில் மொத்தம் ரூ.5,224.38 கோடி கைமாறு கின்றன. கூகுள் நிறுவனம் ஏர்டெல்லில் முதலீடு செய்யும் அறிவிப்பால், பங்குச் சந்தைகள் சரிந்த நிலையிலும், ஏர்டெல் பங்கு மதிப்பு நேற்று வர்த்தக துவக்கத்தில் 1.95 சதவீதம் உயர்ந்து ரூ.721க்கு வர்த்தகம் ஆகின.

Related Stories: