அதிபர் பைடன் ஒரு கைபொம்மை: எலான் மஸ்க் ‘செமகாட்டு’

வாஷிங்டன்: அமெரிக்காவில் காற்று மாசுவை குறைக்க அதிக மின்சார வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பிரபலமாக கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், பிற புகழ் பெற்ற நிறுவனங்களில் தலைவர்களை, வெள்ளை மாளிகையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பைடன் அழைத்தார். இந்த ஆலோசனைக்கு பிறகு பைடன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு நிறுவனங்களின் பெயரை மட்டுமே குறிப்பிட்டார்.

உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பெயரை குறிப்பிடவில்லை. இதனால், டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடும் கோபம் அடைந்துள்ளார். அவர் டிவிட்டர் பதிவில், `பைடன் மனித உருவிலான ஒரு கைபொம்மை.  அவர் அமெரிக்கர்களை முட்டாள்களை போன்று நடத்துகிறார்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: