தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள், விளம்பரங்கள் அகற்றும் பணி தீவிரம்

ஈரோடு : தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்., 19ம் தேதி நடத்தப்படும் எனவும்,  அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடக்கும் ஈரோடு மாநகராட்சி, நகராட்சி,  பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.  இதையொட்டி, ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அரசு மற்றும் பொது இடங்களில்  ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சியினர் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள்,  தலைவர்கள் வாழ்த்து பேனர்கள் அகற்றிட மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்  சிவகுமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகரில் அனைத்து பகுதிகளிலும்  சுவரொட்டிகள், அரசியல் கட்சியினர் சுவர் ஓவியங்களை மாநகராட்சி தூய்மை  பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுவர் ஓவியங்கள் இருந்த  பகுதிகளில் வெள்ளை வர்ணம் பூசி, அதனை மறைத்தனர். இதேபோல் நகராட்சி,  பேரூராட்சிகளிலும் தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின்பேரில் சுவர்  விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Related Stories: