வடகொரியா 6வது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல்: அமெரிக்காவின் பொருளாதார தடை, ஐநா எச்சரிக்கை, உலக நாடுகளின் எதிர்ப்பு என்று எதைக் கண்டும் அஞ்சாமல், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தென் கொரியா உடனடியாக தகவல்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா தனது கிழக்கு கடற்கரை பகுதியில் 5 நிமிட இடைவெளியில் நேற்று 2 குறுகிய தொலைதூர ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால் வடகொரியா இதனை இன்னும் உறுதிபடுத்தவில்லை. இதற்கு முன்பு, கடந்த 5, 11,15,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஏவுகணை சோதனைகளை வடகொரியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது. வடகொரியா ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், இது 25 நாட்களில் நடத்திய 6வது ஏவுகணை சோதனையாக இருக்கும்.

Related Stories: