அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் விசா

வாஷிங்டன்: சீனா உள்பட உலக நாடுகளை மிஞ்சும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை மூலம் வலுப்படுத்த, ஸ்டார்ட்அப் விசா அளிக்கும் அமெரிக்க போட்டிகள் சட்டம் 2022 மசோதா, பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் பைடன் அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, குடியுரிமை மற்றும் நாட்டுரிமை சட்டத்தில் `டபிள்யூ’ என்று புதிய பிரிவு குடியுரிமை இல்லாத ஸ்டார்ட்அப் தொழில் தொடங்கும் நிறுவனத்தின் முக்கிய ஊழியர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஸ்டார்ட்அப் விசா வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த செவ்வாய் கிழமை தாக்கல் செய்த மசோதா விதிகளின்படி, ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி, சட்டப்பூர்வ, நிரந்தர குடியுரிமை கோரி சுயமாக விண்ணப்பிக்கும் தொழில்முனைவோரை அனுமதிக்கும் விதிமுறைகளை உருவாக்கும்படி உள்துறை அமைச்சகத்தின் செயலருக்கு இந்த மசோதா வழிகாட்டுகிறது. இந்த புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அவற்றின் வளர்ச்சி அடிப்படையில் `டபிள்யூ-1’, `டபிள்யூ-2’ என்ற விசா பிரிவுகளின் கீழ் முதலில் 3 ஆண்டுகளும் பிறகு 8 ஆண்டுகள் வரை நீட்டித்து கொள்ளும் விசா வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன.

Related Stories: