ஏலச்சீட்டு நடத்தி ரூ.7 லட்சம் மோசடி: 4 பேருக்கு வலை

பெரம்பூர்: திருவொற்றியூர் சுங்கச்சாவடி பகுதியை சேர்ந்தவர் சொப்னா (எ) ஸ்டெல்லா (37). பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள இணையதள சேவை மையத்தில் டைப்பிஸ்ட்டாக வேலை செய்து வருகிறார். இவர், கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் வசிக்கும் தனக்கு அறிமுகமான கலைச்செல்வி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 பேரிடம் கடந்த 2019ம் ஆண்டு ஏலச்சீட்டுகள் போட்டுள்ளார். மாதம்தோறும் ₹1000, ₹2 ஆயிரம் வீதம் மொத்தம் ₹7 லட்சம் வரை செலுத்தி வந்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு ஏலச்சீட்டுகளின் முதிர்வு காலம் முடிவடைந்த நிலையில், சீட்டு நடத்தி வந்த 3 பேரும் சொப்னாவுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து சொப்னா, சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றம் வழக்கை விசாரித்து, ஏலச்சீட்டு நடத்தி ₹7 லட்சம் மோசடி செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கொடுங்கையூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் கலைச்செல்வி, கவிதா, சிவசங்கர் மணி, கலா வை தேடி வருகின்றனர்.

Related Stories: