விவசாயி வீட்டில் கொள்ளை

ஊத்துக்கோட்டை: பென்னாலூர்பேட்டை அடுத்த மேலக்கரமனூர் கிராமம் கம்மாளத்தெருவை சேர்ந்தவர் மோகன்(60). விவசாயி. கடந்த 22ம் தேதி மாலை வீட்டிலிருந்து தனது தங்கை மகளின் மகனுக்கு பெயர் சூட்டு விழாவிற்காக திருவள்ளூரில் உள்ள ஜெயா நகருக்கு சென்றார். பின்னர் அன்று இரவு அங்கேயே தங்கி நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார்.  அப்போது, வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை, 500 கிராம் வெள்ளி, ₹1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் பென்னலூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: