ஆஸி. டி20 அணியில் வார்னருக்கு ஓய்வு

சிட்னி: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான ஆஸி. அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆரோன் பிஞ்ச் தலைமையில் மொத்தம் 16 வீரர்கள் அடங்கிய அணியில் வார்னர், மிட்செல் மார்ஷ் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஜஸ்டின் லேங்கர் விடுப்பில் சென்றுள்ளதால், அவருக்கு பதிலாக ஆண்ட்ரூ மெக்டொனால்டு தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

முதல் டி20 போட்டி சிட்னியில் பிப். 11ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸி. டி20 அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் ஏகார், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், பென் மெக்டெர்மாட், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேடு, ஆடம் ஸம்பா.

Related Stories: