கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் திருட்டு

அண்ணாநகர்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள் (35). இவர், மீஞ்சூரில் செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு, தனது குடும்ப செலவிற்காக, செங்கல் சூளை உரிமையாளரிடம்  ரூ.70 ஆயிரம் கடன்  வாங்கியுள்ளார். இந்த பணத்தை திருப்பி கொடுப்பதற்காக விழுப்புரத்தில் இருந்து பேருந்து மூலம் நேற்று காலை 9.30 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். பின்னர், அங்குள்ள கழிவறை வெளியே தனது பையை வைத்து விட்டு, உள்ளே சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது, பணப்பை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: