இதுநாள் வரை வெளியே காட்டப்படாத அனுஷ்கா - விராட் தம்பதியின் மகள் புகைப்படம் ‘லீக்’- நெட்டிசன்கள் காரசார மோதல்

மும்பை: இதுநாள் வரை வெளியே காட்டப்படாத அனுஷ்கா - விராட் தம்பதியின் மகள் புகைப்படம் ‘லீக்’ ஆனதால் நெட்டிசன்கள் மத்தியில் காரசார மோதல் ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா - கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஜோடிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை கடந்த சில மாதங்களுக்கு முன் பிறந்தது. இதுவரை அவர்கள் தங்களது குழந்தையின் முகத்தை பொதுவெளியில் காட்டவில்லை. தனியுரிமை காரணமாக தங்களது மகளின் புகைப்படத்தை எடுக்க வேண்டாம் என்றும் இந்த ஜோடி கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலியின் மகள் வாமிகாவின் முதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேப் டவுனில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியை பார்வையாளர்கள் கேலரியில் அனுஷ்கா ஷர்மா தனது மகள் வாமிகாவுடன் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது கருப்பு உடை அணிந்துள்ளார்; அவரது மகள் வாமிகா இளஞ்சிவப்பு நிற உடை அணிந்திருந்தார். இதனை வீடியோவாக படம் பிடித்த ஒருவர், தற்போது அதனை சமூக ஊடகங்களில் வைரலாக்கி உள்ளார்.

அந்த வீடியோவில் வாமிகா முகம் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த அனுஷ்கா, விராட் கோலியின் ரசிகர்கள், நெட்டிசன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம் விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் அனுமதியின்றி புகைப்படத்தை பகிர்ந்ததற்காக ரசிகர்கள் சிலர் கோபம் அடைந்துள்ளனர். ஆனால், இதுகுறித்து விராட் கோலி - அனுஷ்கா தம்பதிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: