கம்பம் அருகே மண் அரிப்பால் ஆற்றங்கரை சேதம்-அலட்சியம் காட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்

கம்பம் : கம்பம் அருகே, மண் அரிப்பால் பெரியாற்றங்கரை சேதமடைந்துள்ள நிலையில், அதை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.கம்பம் அருகே, சுருளிப்பட்டி முல்லைப்பெரியாறு மணப்படுகை பகுதியில், கடந்த 1985ல் தேசிய ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதிப்பாடு திட்டத்தில் மதகு அமைக்கப்பட்டது. இந்த தலை மதகிலிருந்து சீலையம்பட்டி வரை பாளையம் பரவு வாய்கால் செல்கிறது.

இந்த கால்வாயை இரண்டாகப் பிரித்து பி.டி.ஆர் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால்கள் மூலம் சுமார் 5,146 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த இரண்டு வாய்கால்களுக்கு தண்ணீர் செல்லும் முல்லைப்பெரியாறு ஆற்றின் கரைகள் பல ஆண்டுகளாக பலப்படுத்ததாமல் உள்ளது. டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லக்கூடிய ஆற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து உடையும் அபாயத்தில் உள்ளது.

ஆற்றில் அதிக தண்ணீர் வருவதால் கரையில் மண்அரிப்பு ஏற்படுகிறது. கரை உடைந்தால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்தும். மேலும், பாளையம் பரவு வாய்கால், பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். இது குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கரையில் மண் அரிப்பு ஏற்பட்டபோதே விவசாயிகள் கூறியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆற்றின்கரை ஓற்றையடி பாதை போல உள்ளது.

இது குறித்து விவசாயி பொன்னையா கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டபோதே பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கடந்தாண்டு அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். அப்போது இப்பகுதியில் செக்டேம் கட்டவும், கரையைப் பலப்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

Related Stories: