பழைய, புதிய பஸ் நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பு-வேலூர் மாநகராட்சி நடவடிக்கை

வேலூர் : வேலூர் மாநகராட்சி சார்பில் சிஎம்சி மருத்துவமனை வளாகம், பழைய, புதிய பஸ் நிலையங்கள், தங்கும் விடுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி, வேலூரில் முழு ஊரடங்கு காரணமாக பழைய, புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் பழைய, புதிய பஸ் நிலையங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையாக கிருமி நாசினி தெளித்தனர்.

அதேபோல் சிஎம்சி மருத்துவமனைக்கு அதிகளவில் நோயாளிகள் வருவதை கருத்தில் கொண்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவு, சிஎம்சி வளாகத்தில் உள்ள சாலைகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மேலும் பாபுராவ் வீதி, மெயின் பஜார், மிட்டா அனந்தராவ் வீதி, பேரி பக்காளி தெரு, லத்தீப் பாஷா தெரு, சுக்கைய வாத்தியார் தெரு, ஜெயராமசெட்டிதெரு, ஆற்காடு சாலை, தோட்டப்பாளையம் பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், மேன்சன்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Related Stories: