சில்லி பாயின்ட்...

* புரோ கபடி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 35-34 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை போராடி வென்றது.

* ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டித் தொடரில் இந்தியா இன்று சீன தைபே அணியை எதிர்கொள்கிறது. முதல் லீக் ஆட்டத்தில் ஈரானுடன் 0-0 என டிரா செய்ததால் இந்த போட்டியில் வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் இந்தியா களமிறங்குகிறது.

* சையது மோடி சர்வதேச பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் ரஷ்யாவின் எவ்ஜெனியா கொசெட்ஸ்கயாவுடன் மோதிய சிந்து முதல் செட்டில் 21-11 என வென்று முன்னிலை வகித்த நிலையில், எவ்ஜெனியா காயம் காரணமாக விலகினார்.

* ஆஸி. ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - டாரியா ஜுராக் (குரோஷியா) ஜோடி 6-1, 4-6, 9-11 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் ஆந்த்ரே கொலுபேவ் - லியுட்மைலா கிச்சனோ ஜோடியிடம் போராடி தோற்றது.

* இந்திய அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், தாமதப் பந்துவீச்சுக்காக தென் ஆப்ரிக்க அணிக்கு போட்டிக்கான ஊதியத்தில் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

* ஐசிசி யு-19 உலக கோப்பை போட்டித் தொடரின் சூப்பர் லீக் காலிறுதி சுற்று வாய்ப்பை இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகள் உறுதி செய்துள்ளன.

Related Stories: