6 மாதத்தில் மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணி : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: கடந்த பருவமழையின்போது சென்னை மதுரவாயல் அருகே நொளம்பூர் செல்லும் வழியே கூவம் ஆற்றை கடக்க முயன்ற 3 பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, இரண்டு தரைப்பாலங்களையும் தற்போது உயர்மட்ட மேம்பாலமாக மாற்ற அரசு முடிவு செய்தது. இந்த பணிகள் குறித்து மதுரவாயல், நொளம்பூர் கூவம் ஆற்றுப் பகுதியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:இந்த பாலத்தை உயர்த்தி அகலப்படுத்தி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பாலம் மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், ஒரு பாலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இரண்டு பாலங்களின் பணிகளை மாநகராட்சி எடுத்து செய்ய உள்ளது. 140  மீட்டர் அகலம் கொண்டது இந்த பாலம். மேலும் கூவம் ஆற்றின் கரையை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 6 மாதத்தில் பாலம் கட்டும் பணி முடிக்கப்படும் என்றார்.அப்போது, எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: