அமெரிக்காவில் நுழைய முயற்சி கனடா நாட்டு எல்லையில் 4 இந்தியர்கள் உறைந்து பலி

நியூயார்க்: கனடா நாட்டு எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்தியர்களில், குழந்தை உள்பட 4 பேர் பனியால் உறைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.இது குறித்து கனடா போலீசார் கூறுகையில், `அமெரிக்கா-கனடா எல்லையில் எமர்சன் பகுதி அருகே இந்தியாவை சேர்ந்த ஆண், பெண், இளைஞர், குழந்தை என 4 பேர் எல்லையை சட்ட விரோதமாக கடந்ததாக அமெரிக்க எல்லை பாதுகாப்பு போலீசார் தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு சென்று தேடிய போது, அவர்கள் அனைவரும் 9 முதல் 12 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து இறந்து கிடந்தனர். முதல் கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் கடுங்குளிரில் 11 கிமீ தூரம் நடந்து வந்ததால், பனியில்   உறைந்து இறந்திருப்பது தெரிய வந்துள்ளது,’ என்று தெரிவித்தனர்.இந்நிலையில், இந்த இந்திய குடும்பத்தினர் அமெரிக்காவில் நுழைவதற்கு உதவிய அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவர், ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: