சில்லி பாயின்ட்...

* கடந்த ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இடம் பெற்றுள்ளார். அணி விவரம்: ஸ்மிரிதி மந்தனா (இந்தியா), டாமி பியூமான்ட், டேனி வியாட் (இங்கி.), கேபி லூயிஸ் (அயர்லாந்து), நதாலியே ஸ்கிவர் (கேப்டன், இங்கி.), ஏமி ஜோன்ஸ் (இங்கி.), லாரா வுல்வார்ட், மரிஸேன் காப் (தெ.ஆப்.), சோபி எக்லெஸ்டோன் (இங்கி.), லோரின் பிரி (ஜிம்பாப்வே), ஷப்னிம் இஸ்மாயில் (தெ.ஆப்.).

* டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் கோஹ்லி 2 இடம் முன்னேறி 7வது இடத்தையும், ரிஷப் பன்ட் 10 இடங்கள் முன்னேறி 14வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வேகம் பும்ரா மீண்டும் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார்.

* ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 2 வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

* இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளிடையே நேற்று நடந்த ஒருநாள் போட்டி, நடுவர் மாரைஸ் எராஸ்மஸ் பணியாற்றிய 100வது ஒருநாள் போட்டியாக அமைந்தது. இதையொட்டி அவருக்கு ஐசிசி வாழ்த்து தெரிவித்துள்ளது.

* நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருந்த ஒருநாள் போட்டித் தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் கம்பீர் வலியுறுத்தி உள்ளார்.

* கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான (நவ.21 - டிச.18) டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டிக்கெட் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பிபா தெரிவித்துள்ளது.

Related Stories: