பருவநிலை மாற்றத்தால் மூழ்குகிறது ஜகார்தா இந்தோனேசியாவுக்கு புது தலைநகர் நுசந்தரா: 2024ம் ஆண்டிற்குள் மாறும்

ஜகார்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா 17,508 தீவுகளைக் கொண்டது. இங்கு மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 23.8 கோடி மக்கள் வாழ்கின்றனர். உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் 4வது இடத்திலும், அதிக முஸ்லிம்களை கொண்ட நாடுகளில் முதலிடத்திலும் இந்தோனேசியா உள்ளது.  

சாவகம் தீவில் உள்ள ஜகார்தா, இதன் தலைநகரமாகும். உலகளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால், இந்த நகரம்  ஆண்டுக்கு 25 செமீ அளவுக்கு கடலில் மூழ்கி வருகிறது. எனவே, இதற்கு மாற்றாக புதிய தலைநகரத்தை இந்ேதானேசியா அரசு தேடி வந்தது. அதன்படி, தற்போது ஜகார்தாவை விட 4 மடங்கு பெரிதான, ‘நுசந்தரா’ நகருக்கு தலைநகரத்தை மாற்ற இந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ முடிவு எடுத்துள்ளார். இது, கிழக்கு களிமந்தான் மாகாணத்தில் உள்ளது. புதிய தலைநகர் தேர்வுமுயற்சி 2019ம் ஆண்டு தொடங்கியது.  2024க்கு பிறகே, இது முழு அளவிலான தலைநகரமாக மாறும்.

இது கூட சரியில்லை

புதிய தலைநகரமாக நுசந்தரா தேர்வு செய்யப்பட்டதற்கு பருவநிலை நிபுணர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஏனெனில், இதுவும் தீவுக் கூட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்தில் கடல் நீர்மட்ட உயர்வால் மூழ்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: