முத்துப்பேட்டை வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.3.75 லட்சம் மதிப்பிலான 9ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிரடி

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையிலிருந்து கோரையாறு , லகூன் அலையாத்தி காடுகள் வழியாக இலங்கைக்கு ஏலக்காய் மூட்டைகள் கடத்தபடுவதாக முத்துப்பேட்டை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரகுபதி, அய்யப்பசாமி, நுண்ணறிவு பிரிவு வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கோரையாறு தெற்கு பகுதி வழியாக படகில் கடத்தவிருந்த 260 கிலோ எடையுள்ள 9 ஏலக்காய் மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நெய்னா முகம்மது ( 43) என்பவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மேல்நடவடிக்கைக்காக சுங்க இலாகா பிரிவினரிடம் பரிந்துரை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: