நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் ரயில் நிலையம் முற்றுகை: 2வது நாளாக பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்

திருப்பூர்: நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தின. இதனால் தொழிலாளர்களின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங், பிரிண்டிங், டையிங் நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 2வது நாளான நேற்று நூல் விலை உயர்வை கண்டித்து ரயில் நிலையம் முன்பு நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நூல் விலை உயர்வுக்கு எதிராகவும், அதனை கட்டுப்படுத்தக்கோரியும் அவர்கள் கோஷமிட்டனர். இதன் பின்னர் ரயில் நிலைய நுழைவாயில்

பகுதியில் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்கள் நடந்த வேலைநிறுத்தம் காரணமாக ரூ.400 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: