அலையில் சிக்கி மாணவன் மாயம்

திருவொற்றியூர்: மீஞ்சூர் அத்திப்பட்டு புதுநகர் பகவத்சிங் தெருவை சேர்ந்தவர் தனுஷ்(18). திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். தனுஷ் தனது தம்பி தமிழ்ச்செல்வன்(14) மற்றும் அவனது நண்பர்கள் ருத்ரன்(13), வெங்கடேசன்(19), விக்னேஷ்(16), விக்னேஷின் தாய் செல்வி(35) ஆகியோருடன் நேற்று விடுமுறை தினம் என்பதால் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்கு வந்து கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது, ராட்சத அலை சிறுவன் தனுஷை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் வெளியே ஓடி வந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடிபார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தகவலறிந்த எண்ணூர் போலீசார் விரைந்து வந்து  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி எண்ணூர் தீயணைப்பு வீரர்கள் கடலில் மூழ்கிய சிறுவனை தேடி வருகின்றனர்.  

Related Stories: