ரோட்டில் நடந்துசென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியில் ரோட்டில் நடந்துச்சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி, அங்குள்ள கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் 3ம் ஆண்டு படித்து வருகின்றார். அத்துடன் நெற்குன்றத்தில் உள்ள ஒரு மாணவனுக்கு மியூசிக் கிளாஸ் கற்றுக்கொடுத்து வருகிறார்.  நேற்று மாணவனுக்கு மியூசிக் கிளாஸ் சொல்லி கொடுத்துவிட்டு அங்கிருந்து இரவு அரும்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே நடந்துவந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபர் ஒருவர், கல்லூரி மாணவியை  மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு மக்கள் ஓடிவந்தபோது மர்ம நபர், பைக்கில் தப்பிவிட்டார். இதுபற்றி மாணவி, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பாலியல் தொல்லை கொடுத்த நபரின் உருவம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.  

Related Stories: