119வது பிறந்த நாள் கொண்டாடிய மூதாட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே 119வது பிறந்த நாளை கேக் வெட்டி மூதாட்டி கொண்டாடினார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாப்பனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி அம்மாள் (119). இவரது கணவர் கருப்பையா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். 20 வருடங்களுக்கு முன் கருப்பையா இறந்து விட்டார். லெட்சுமி அம்மாளுக்கு 119வது பிறந்தநாள் விழா நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அவரது பேரன், பேத்தி, கொள்ளுபேரன் என 30க்கும் மேற்பட்ட நான்கு தலைமுறையை சேர்ந்த உறவினர்களுடன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. லெட்சுமி அம்மாள் நல்ல கண்பார்வையுடன், தனது வேலையை தானே செய்து கொள்ளும் வகையில் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: