அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6வது சுற்று நிறைவு: 816 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன

மதுரை: மதுரை - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6வது சுற்று நிறைவுபெற்றது. இதுவரை 816 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அடங்க மறுக்கும் காளைகளை வீரர்கள், ஆர்வமுடன் அடக்கி வருகின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளன. சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசு வழங்கப்படவிருக்கிறது.

Related Stories: