கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பஸ்களில் ஆர்டிஒ., ஆய்வு

ஊட்டி : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பஸ்களில் ஆர்டிஒ., ஆய்வு செய்தார். கொரோனா மற்றும் ஒமிக்கரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊட்டியில் இருந்து கிராமப்புறங்கள் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்களா என்று ஊட்டி ஏடிசி., பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் ஆய்வு செய்தார்.

அரசு பஸ்கள் மற்றும் மினிபஸ்களில் ஏறி கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டுள்ளனரா என்பதையும், அனைவரும் முக கவசம் அணிந்துள்ளனரா என்பதையும் பார்வையிட்டார்.

முக கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டியவர்கள், பயணிகள் மற்றும் நிழற்குடையில் காத்திருந்த பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கியதுடன் கட்டாயம் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தினார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

Related Stories: