நெல்லை டவுனில் சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்

நெல்லை : நெல்லை டவுனில் வாகையடி முனை பகுதியில் கழிவுநீர் தடையின்றி செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். நெல்லை டவுன் ரதவீதிகளில் உள்ள கழிவு நீரோடைகள் பல இடங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் வாகையடி முனை பகுதியில் கழிவு நீரோடையில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசியது.

இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் நோய் தொற்று பரவும் நிலையும் காணப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாகையடி முனை பகுதி சாலையில் தேங்கி நின்ற கழிவுநீரை அப்புறப்படுத்த மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதி ஓடைக்கு செல்லும் வகையில் சாலையின் நடுவே குழாய் பதிக்கப்பட்டு கழிவுநீர் எதிர்புறத்தில் உள்ள ஓடைக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்குவது தடுக்கப்பட்டது.

Related Stories: