ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமநிலையில் உள்ளது; புஜாரா பேட்டி

ஜோகன்னஸ்பர்க்: தென்ஆப்ரிக்கா - இந்தியா இடையே 2வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 202, தென்ஆப்ரிக்கா 229 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 2வது இன்னிங்சில் இந்தியா 266 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா நேற்றைய 3வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 8 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் தென்ஆப்ரிக்கா வெற்றிபெற 122 ரன் தேவை என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வீரர் புஜாரா அளித்த பேட்டி: இந்த பிட்ச்சில் கணிக்க முடியாத வகையில் பவுன்ஸ் உள்ளது.

இதனை எதிர்கொள்வது எளிதானதல்ல. ரகானேவுடன் பார்ட்னர் ஷிப் அமைத்து 111 ரன் எடுத்தது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். அந்த நேரத்தில் அணிக்காக ரன்கள் வேண்டும் என்ற கட்டத்தில் நாங்கள் இருந்தோம். நான் கூடுதலாக எதுவும் செய்யவில்லை. நான் நன்றாக பேட்டிங் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். எல்லாமே என் திட்டத்திற்கு ஏற்ப நடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் இதுவும் ஒன்று, எனக்கு ஒரு லூஸ் பந்து வரும் போதெல்லாம், நான் அதை பவுண்டரியா மாற்ற முயற்சித்தேன்.

இந்த ஃபார்ம் தொடரும், அடுத்த ஆட்டத்திலும் பெரிய ஸ்கோரைப் பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது ஒரு சவாலான பிட்ச். ஆனால் நாங்கள் போர்டில் ரன்கள் எடுத்துள்ளோம். அதனால் ஆட்டம் இன்னும் சமநிலையில் உள்ளது. நாங்கள் இன்று (நேற்று) அதிக விக்கெட் எடுக்கவில்லை. ஆனால் நாளை (இன்று) எங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறோம், என்றார். மேலும் கோஹ்லி நிச்சயமாக குணமடைந்து வருகிறார், விரைவில் அவர் உடல்தகுதியுடன் இருப்பார் என்று நான் உணர்கிறேன், என்றார்.

Related Stories: