அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் காயா

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, ஸ்லோவேனியா வீராங்கனை காயா யுவான் தகுதி பெற்றார். இத்தொடரின் 2ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவுடன் (பெலாரஸ்) நேற்று மோதிய காயா (21 வயது, 100வது ரேங்க்) 7-6 (8-6), 6-1 என நேர் செட்களில்  வென்று அசத்தினார். இப்போட்டி 1 மணி, 29 நிமிடத்துக்கு நீடித்தது. நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.) 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கோகோ காபை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸ், எலனா ரிபாகினா (கஜகஸ்தான்) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ராம்குமார் ராமநாதன் ஜோடி 2வது சுற்றில்  அமெரிக்காவின் லம்மான்ஸ் - வித்ரோ ஜோடியை 6-7 (4-7), 7-6 (7-3),  10-4 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories: