அவிநாசி அருகே ஓடும் பேருந்தில் 30 சவரன் நகை கொள்ளை

அவிநாசி: ராசிபுரத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் 30 சவரன் நகைகள் பையுடன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த நூர்முகம்மது தனது குடும்பத்துடன் கோவைக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பெருமாநல்லூரை கடந்து பேருந்து சென்றபோது நகைகள் வைத்திருந்த பையை காணவில்லை. நகைகள் கொள்ளை போனது தொடர்பாக அவிநாசி காவல்நிலையத்தில் நூர்முகம்மதுவின் மகன் முகமது ஆரிஸ் புகார் அளித்துள்ளார்.

Related Stories: