வைகுண்ட ஏகாதசிக்காக தினமும் திருப்பதியை சேர்ந்த 5,000 பேருக்கு டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதற்காக, ஆன்லைனில் முன்பதிவு செய்தும், திருப்பதிக்கு வந்து டிக்கெட் வாங்கியும் தரிசிக்கின்றனர். இந்நிைலயில், ஜனவரி 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் நடக்கிறது. இதையொட்டி, ஆன்லைனில் ஏற்கனவே ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ஆன்லைன் கல்யாண உற்சவத்தில் தரிசன டிக்கெட்  என அனைத்து டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதனால், திருப்பதியில் எந்தவித டிக்கெட்டுகளும் பக்தர்களுக்கு வழங்கப்படாது. வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் திருப்பதி ஆதார் முகவரி கொண்டவர்களுக்கு தினந்தோறும் 5000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் . எனவே வெளி மாவட்ட மற்றும்  வெளி மாநில பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை பெற வரவேண்டாம் என தேவஸ்தானம் நேற்று அறிவித்துள்ளது.

Related Stories: