பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 21வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- யு மும்பா மோதின. இதில் யு மும்பா 37-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 28-42 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வீழ்த்தியது. பெங்களூரு கேப்டன் பவன் குமார் ஷெராவத் 22 புள்ளிகள் எடுத்தார்.