எல்லை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 27 சாலைகள், மேம்பாலங்கள் திறப்பு ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்

புதுடெல்லி: நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த, எல்லைச் சாலைகள் அமைப்பின் கீழ் 27 சாலைகள், பாலங்களை் காணொலி மூலம் திறந்து வைத்த ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ‘எல்லைப் பகுதிகளில் நடைபெறும் ஊடுருவல், சண்டை, சட்டவிரோத வர்த்தகம், கடத்தல் ஆகியவற்றை தடுக்க, ஒன்றிய அரசு நாட்டின் கண்காணிப்பு அமைப்பை சமீப காலமாக வலுப்படுத்தி வருகிறது. முறையான உள்கட்டமைப்பு இல்லாததால், எல்லைகளில் எதிரிகளின் தாக்குதல்களுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியவில்லை. இப்பகுதிகளின் வளர்ச்சியில் எல்லைச் சாலைகள் அமைப்பு உறுதுணையாக இருக்கிறது. இந்த சாலைகள், பாலங்கள் நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: