கொடைக்கானலில் மக்களுக்கு தொல்லை தந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் நகர் பகுதியில் பல்வேறு  இடங்களில் குரங்குகள் தொல்லை அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள்,  வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாயினர். இதுகுறித்து தினகரன்  நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வனத்துறையினர் நேற்று,  கொடைக்கானல் செல்லபுரம் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை இம்சைபடுத்தி  வந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் குரங்குகளை  வனப்பகுதிக்குள் விட்டனர்.

 இதுகுறித்து வனவர் ராஜா அழகு கூறியதாவது,  ‘இப்பகுதியில் தொல்லை கொடுத்து வந்த குரங்குகள் கூண்டு வைத்து  பிடிக்கப்பட்டது. இதேபோல பொதுமக்கள் புகார் தெரிவித்தால் குரங்குகள்  பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்படும்’ என்றார்.

Related Stories: