நாளை முதல் 10 நாட்களுக்கு கர்நாடகாவில் இரவு ஊரடங்கு: டெல்லியில் இன்று அமல்

பெங்களூரு: கர்நாடகாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை யில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது: கர்நாடகாவில் ஒமிக்ரான் எதிர்பார்த்ததை விட அதிக வேகமாக பரவி உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 28ம் தேதி (நாளை) முதல் ஜனவரி 7ம் தேதி வரையில் 10 நாட்கள் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் நபர்களை தவிர வேறு யாருக்கும் வெளியே நடமாடுவதற்கு அனுமதி கிடையாது. இரவு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் பப், பார் உள்ளிட்டவைக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். இதே போல டெல்லியில் இன்று முதல் இரவு ஊரடங்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: