ஆஷஸ் 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா -இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் ஆஸி. வெற்றிபெற்று முன்னிலை வகிக்கும் நிலையில் 3வது டெஸ்ட் மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. ஆஸி.கேப்டன் கம்மின்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார்.

ஹேசல்வுட் காயம் காரணமாக இந்த டெஸ்ட்டிலும் இல்லை. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், பிராட், ஒல்லிபோப் ஆகியோருக்கு பதிலாக பேர்ஸ்டோவ், ஜாக்லீச், மார்க்வுட் களம் இறங்குகின்றனர். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Related Stories: