'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும்': பிரேமலதா விஜயகாந்த் உறுதி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும்  என்றும் தேமுதிகவில் செயல்தலைவர் பொறுப்பு ஏற்படுத்துவது பற்றி விஜயகாந்த் பொதுக்குழுவில் அறிவிப்பார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னை தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்திய பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அண்மையில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கட்சியில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினர் என்று குறிப்பிட்டார்.

ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுகவுடன் அல்லது தனித்து அல்லது புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வரும் தேமுதிக, சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்து போட்டியிடுவது உறுதி என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். செயல் தலைவராக பிரேமலதா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி தனித்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: